தரையில் விழுந்து வணங்கிய டீன்! கோவையில் நெகிழ்ச்சி

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது உலகத்தில் நிலவும் கடுமையான சூழலில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது.
இதனால், உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் செவிலியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய டீன் ரவீந்திரன், “தற்போதைய நெருக்கடியான சூழலில் நீங்கள் தான் கடவுள்” என்று கூறி நன்றி தெரிவிக்கும் விதமாக தரையில் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் செவிலியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.