அழியவில்லை… மீண்டு வந்த உலகின் அரிய பறவை!

உலகிலேயே அழிந்ததாக நினைத்த அரிய வகை பறவை தற்போது இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது .

உலகில் பல உயிரினங்கள் இயற்கை சீற்றத்தினாலும் , காலநிலை மாற்றத்தினாலும் அழிந்து கொண்டே வருகிறது. 170 ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் பிரவுட் பாப்புலர் என்ற பறவை அழிந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பறவை தற்போது இந்தோனேசியா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பறவை ஆர்வலர் கஸ்டின் அக்பர், அழிந்ததாக நினைத்த பறவை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் முதலில் அது அந்த பறவை தானா? என்று சந்தேகம் இருந்தது.

ஆனால் அதனை இப்போது பிளாக் பிரவுட் பாப்புலர் பறவை தான் என்று உறுதி செய்ததால் ரொம்ப சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார். போர்னியோ தீவுகளில் 1850 களில் காணப்பட்ட பிளாக் பிரவுட் பறவை பின்னாட்களில் மறைந்தே போனது. அதனை அங்குள்ள மக்களுக்கு அவற்றின் தகவல்களை தெரிவித்து பறவையை கண்டுபிடிக்குமாறு பறவை ஆர்வலர்கள் வலியுறுத்திருந்தனர் .

அதன் அடிப்படையிலேயே அந்தப் பறவையை குறித்த தகவல் வெளிவந்ததால் அவற்றை புகைப்படமாக எடுத்து கஸ்டின் அக்பருக்கு அனுப்பியுள்ளனர். உடனே அதனை பிளாக் பிரவுட் என்று உறுதி செய்தவுடன் சக ஆர்வலரான டிங்கிலிவுக்கு புகைப்படத்தை அனுப்பி உள்ளார். டிங்கிலி மிகவும் ஆச்சரியத்துடன் போர்னியோ தீவு சாதாரணமானது அல்ல அங்கு இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…