ஒரு போட்டோ எடுத்தது குத்தமா – ஹெச்.ராஜா!

சென்னை புத்தக கண்காட்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எதிரான புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு, இளைஞர் ஒருவர் ஹெச்.ராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா பிரபாகரன் என்ற இளைஞர் எடுத்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை சமூக விரோதிகள் என்று கூறும் ஹெச்.ராஜா, ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிக்கும் ஒரு புத்தகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் – இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர் என்ற அந்த புத்தகம் பாசிசத்தை கடுமையாக விமர்சிக்கும். நிமிர் பதிப்பகம் கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டது .

ஆர் . எஸ் . எஸ் எப்படி இந்து தீவிரவாதத்தைக் கட்டமைக்கிறது என்றும், சிறுபான்மையினர் ஆர் . எஸ் . எஸ் அமைப்பால் எப்படி வேட்டையாடப்படுகின்றனர் என்பது குறித்தும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கலவரங்களை எப்படி உருவாக்குவது, எப்படி திசைதிருப்புவது, கலவரம் முடிந்ததற்கு பிறகு எவ்வாறு வழக்குகளைக் கையாள வேண்டும் போன்ற அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது குறித்து அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான புத்தகத்துடன் இளைஞர் ராஜா பிரபாகரன் ஹெச்.ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…