அசாமில் பிரியங்கா… தமிழ்நாட்டில் ராகுல்… கொண்டாட்டமாய் மாறிய தேர்தல் களம்!

அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பழங்குடியின பெண்களுடன் நடனமாடினார்.
அசாமுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, லகிம்பூர் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பழங்குடியின பெண்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, அவர்களுடன் ஜூமூர் என்ற நடனத்தை ஆடினார்.
Beautiful moments from the campaign trail in Assam today. This video of @priyankagandhi ji with the local people is ❤️ pic.twitter.com/oCOhM5jQbx
— Ruchira Chaturvedi (@RuchiraC) March 1, 2021
முன்னதாக காமக்யா கோயிலில் வழிபட்டார். தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு, தேஸ்பூர், சோனித்பூர் மாவட்டங்களிலும் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.
#WATCH: Congress leader Rahul Gandhi dances with students of St. Joseph's Matriculation Hr. Sec. School in Mulagumoodubn, Tamil Nadu during an interaction with them pic.twitter.com/RaSDpuXTqQ
— ANI (@ANI) March 1, 2021
முன்னதாக கன்னியாகுமரியில் உள்ள முலகுமுது என்ற கிராமத்தில் உள்ள தூய ஜோசப் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பள்ளி மாணவர்களிடையே ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது பள்ளி மாணவர் ஒருவரிடம் ‘Aikido’ தற்காப்புக்கலையை ராகுல் காந்தி செய்து காட்டினார்.
https://twitter.com/ANI/status/1366310092438523904?s=20
அதன் பின்னர் பள்ளி மாணவி ஒருவர் 15 புஷ் அப்களை எடுக்க முடியுமா என்ற சவால் விடுத்தார். அதற்கு நீங்கள் என்னை சங்கடப்பட வைக்கிறீர்கள் என புன்னகையுடன் பதிலளித்த ராகுல் காந்தி உடனடியாக அவரின் சவாலை ஏற்று, அந்த மேடையிலேயே சில நொடிகளுக்குள் 15 புஷ் அப்களை செய்து முடித்தார். இதனால் அங்கு கூடியிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.