யாருடைய உதவியையும் எதிர்பார்க்காத கலெக்டர்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தின் ஆட்சியராக ரோஹினி சிந்தூரி இருந்து வருகிறார். நேர்மையான தனது நடத்தையாலும், அதிரடியான நடவடிக்கை எடுப்பவராக இருப்பதாலும், மக்கள் அனைவரும் விரும்பக்கூடிய  ஆட்சியராக ரோஹினி திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோஹினி தனது விடுமுறையை கழிப்பதற்காக மால் ஒன்றுக்கு சுடிதாருடன் சாதாரணமாக தனது காரில் சென்றுள்ளார்.

அப்போது,  திடீரென தனது கார் டயர் பஞ்சர் ஆகி இருக்கிறது. இதனையடுத்து யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தன் காரில் இருந்த ஸ்டெப்னிய எடுத்து மாட்டிக் கொண்டு இருந்துள்ளார். அதனை கண்ட பொது மக்களில் ஒருவர் இவரை அடையாளம் கண்டு, நீங்கள் மாவட்ட ஆட்சியர் தானே என கேட்க, அவர் சாதாரணமாக திரும்பி சிரித்துள்ளார்.

ஒரு மாவட்ட ஆட்சியர் இவ்வளவு சாதாரணமாக ரோட்டில் ஸ்டெப்னி மாட்டி கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் பலரும் வியந்து அவரிடம் சென்று பேசியுள்ளனர். மேலும், இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…