பேத்திகளின் படிப்புக்காக ஆட்டோவில் வாழும் தாத்தா!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கார் என்ற பகுதியில் தேஸ்ராஜ் என்ற வயது 74 முதியவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு மூத்த மகன் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், ஒரு வாரம் கழித்து மகனின் உடல் ஆட்டோ ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனால், மனமுடைந்த தேஸ்ராஜ் கூறும்பொழுது, ”அவனுடன் என்னுடைய ஒரு பாதி உயிர் போய்விட்டதைப் போல் உணர்ந்தேன். ஆனாலும், பொறுப்புகளைச் சுமக்க வேண்டியதிருந்தது. அப்போது, அமர்ந்து அழுவதற்குக் கூட எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அடுத்த நாளே ஆட்டோ ஓட்டும் வேலையைத் தொடர்ந்தேன்” என்று கூறியிருந்தார்.

பின்னர், 2 ஆண்டுகள் கழித்து இவரின் 2 ஆவது மகனும் தற்கொலை செய்து கொண்டார். இதனால், தனது மனைவி, மருமகள் மற்றும் 4 பேர குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு தேஸ்ராஜுக்கு வந்து விட்டது. 9ஆம் வகுப்பு படித்த பேத்தியின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டவேண்டி வந்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கல்வி செலவு போக, மிகக்குறைந்த தொகை 7 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுக்கு மிஞ்சியது. பல நாட்கள் சாப்பிடுவதற்கு உணவு இன்றி தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், தேஸ்ராஜின் பேத்தி 12 ஆம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்ற மகிழச்சியில், அன்று நாள் முழுவதும் அதனை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு பி.எட். படிக்கச் செல்ல வேண்டும் என்ற பேத்தியின் விருப்பத்திற்காக தனது வீட்டை விற்றுள்ளார். பின்னர், அவரின் மனைவி, மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளை கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் விட்டுள்ளார்.

மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிய அவர், ஆட்டோவிலேயே சாப்பிட்டு, தூங்கியுள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக பேத்தி வந்ததில் தனது அனைத்து வலிகளும் மறைந்து விட்டதாக பெருமையாக தெரிவித்துள்ளார். ”எனது பேத்தி ஆசிரியராக வரும் நாள் தொலைவில் இல்லை என்றும், அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி வழங்குவேன்” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இவரின் நிலை குறித்து, சமூக ஊடகங்கள் வழியே பலருக்கும் தெரியவந்து. பலரும் உதவி செய்ய முன்வந்தனர். பலரின் உதவியினால் தற்போது இவருக்கு 24 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.

 இந்த பணத்தில் அவர் வீடு ஒன்றை கட்டி கொள்ளவும், தனது பேத்தியின் கல்வி செலவை ஈடு செய்யவும் பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *