மஞ்சள் நிறத்தில் பென்குயின்!
பென்குயின்கள் பெரும்பாலும் கருப்பு வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், உலகிலேயே முதன்முறையாக மஞ்சள், வெள்ளை நிறத்துடன் காணப்படும் பென்குயின், தெற்கு அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தை சேர்ந்த வன விலங்கு போட்டோகிராபர் ஆடம்ஸ்(yves adams), இந்த பென்குயினைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ”அட்லாண்டிக் கடற்கரையில் இருந்த 1.20 லட்சம் பென்குயின் பறவைகளில் இது மட்டுமே மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்பட்டது. இது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதன் நிறமிகளில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இது மஞ்சள் நிறத்தில் உள்ளது” என்றார்.