வெடி விபத்து குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் உறுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 30 பேர் மருத்துவமனைகளில் பயங்கர தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேன்சி ரக பட்டாசுகளின் முனைகளில் மருந்து செலுத்தும் பணியின் போது, தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், “பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன்,” பட்டாசு ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.