வேளாண், குறுந்தொழில் பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் வாகனம் தயாரிப்பு

வேளாண் பொருட்கள், குறுந்தொழில் கூடங்கள் தயாரிப்புகளை கொண்டு செல்லும் வகையில் அதிக இயங்கு திறனுடன் எலெக்ட்ரிக் வாகனம் தயாரிப்பு 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலே, எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து தேவைக்கு ஏற்ற வகையில் மின்னணு இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையிலே கோவையில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பரதன் என்பவர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

வேளாண்மையில் விளைவிக்கப்படுகின்ற விவசாய பொருட்கள், குறுந்தொழில் கூடங்களில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களை ஏற்றி செல்ல உகந்த வகை என அனைத்து வணிகம் சார்ந்த பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இதனை அறிமுகப்படுத்தினார். 

புதிய வாகனம் குறித்து அதனை வடிவமைத்த பரதன் கூறுகையிலே, சக்தி வாய்ந்த 10 kwh பேட்டரி, ஒரு சார்ஜில் 525 கிமீ தூரம் வரை செல்ல முடியும் வகையில் இதனை உருவாக்கி உள்ளதாகவும், நாட்டிலேயே புதிய முயற்சியாக முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன துறையில் ஆராய்ச்சி மற்றும் துறை சார்ந்த மேம்பாடுகளை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

புளூடூத், ஜி.பி.எஸ். உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளாதக பரதன் தெரிவித்தார். இந்த வாகனம் வழக்கமாக சந்தையில் முன்னதாக அறிமுகமாகி விற்பனையில் உள்ள வாகனங்களை விட 30-40 % விலை குறைவாக கிடைக்குமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றன 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *