என்ன விலை அழகே!! சந்தைக்கு வருகிறது Vivo Y73t..!!!

கடந்த சில தினங்களுக்கு முன் சீனாவில் Y32t மற்றும் Y52t மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய விவோ நிறுவனம் தற்போது “t” பிராண்டிங் கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் படி, Y73t ஆனது 6.58-இன்ச் எல்சிடி திரையைக் கொண்டும் 2408×1080 பிக்சல்களின் HD+ தெளிவுத்திறனை வழங்கியுள்ளது. அதே போல் ஹூட்டின் கீழ், Y73t ஆனது MediaTek Dimensity 700 சிப் மூலம் இயக்கப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து 7nm செயல்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 2.2GHz இல் இயங்கும் 2 கோர்கள் மற்றும் 2.0GHz இல் 6 கோர்கள் உள்ளதாக விவோ நிறுவனம் கூறியுள்ளது.

அதே போல் 44W வேகமான சார்ஜிங் வசதிகளுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா மூலம், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் ஸ்னாப்பர் உள்ளது.

மேலும், அடிப்படை 8ஜிபி ரேம்+128ஜிபி கொண்டுள்ள இத்தகைய ஸ்மார்ட் போன் ஆனது ஃபாக் ப்ளூ, மிரர் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைப்பதாகவும், இவற்றின் விலையானது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *