ஏர்டெல் நிறுவனம் மாஸான அப்டேட்!!! குஷியில் வாடிக்கையாளர்கள்!!!

வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கு மத்தியில் ஸ்மாட் போன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜியோ புது புது அப்டேட்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

தற்போது இதற்கு போட்டியாக பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சேவையைச் சிறப்பாக வழங்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அமைதியாகத் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.

அதன் படி, ரூ. 519 மற்றும் ரூ. 779 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதனிடையே ரூ. 519 என்ற திட்டத்தில் 60 நாட்கள் செல்லுபடியும் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட்
கால்கள், தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

அதே போல் இந்த ரூ 779 திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட்
கால்கள், தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதன் மூலம் ஜிபி டேட்டாவும் உங்களுக்கு ரூ.5.76 விலையில் கிடைக்கிறது. அதேபோல், இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த தினசரி செலவு ரூ.8.65 ஆக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *