5ஜி அலைக்கற்றை ஏலம்: ரிலையன்ஸ் ஜியோ முன்னணி!!!

5ஜி அலைக்கற்றை ஏலம் சுமார் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய 5ஜி ஏழுமலை கட்சியானது தொடர்ந்து 7வது நாளாக நடைபெற்று இன்றைய தினத்தில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தங்கு தடை இன்றி அதிவேகத்தில் இணைய சேவையை தொடங்க 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முதல் நாளில் 1 கோடி 47 லட்சம் லட்சத்திற்கு அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மந்தநிலையாக சென்றது.

இதனால் ஒவ்வொரு ஆனாலும் ஏலத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது. இந்நிலையில் மொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு 5ஜி ஏலம் விடுக்கப்பட்டு இருந்ததாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்தது.

இத்தகைய தொகையானது 2010ஆம் ஆண்டு 3ஜி அலைக்கான 3 மடங்கு அதிகமாகும். 4ஜி விட 10 மடங்கு அதிகமாக செயல்படும் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. மொத்தமாக 57 ஆயிரத்து 122 கோடிக்கு ஜியோ ஏலம் எடுத்துள்ளது.

அடுத்தப்படியாக ஏர்டெல் நிறுவனம் 18 ஆயிரத்து 699 ரூபாய்க்கும், வோடாபோன், ஐடியா நிறுவனம் ஆயிரத்து 993 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.