இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அப்டேட்!!! – என்ன தெரியுமா?

இந்தியா மற்றும் சீனா இடையே கடும் மோதல் நிலவியதால் கடந்த 2020-ஆம் ஆண்டு 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. இதனால் டிக்டாக் பதிலாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் மக்களின் மோகமானது அதிகமானது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் பதிவிடும் வீடியோக்கள் 15 நிமிடங்களுக்கு குறைவாக இருந்தால் தானாகவே ரீல்ஸ் பக்கத்திற்கு வந்துவிடும் என கூறியுள்ளது.

இதனிடையே புதிய அம்சம் இனி பதிவிடும் வீடியோக்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறியுள்ளது. இருப்பினும் உள்ள பழைய வீடியோக்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது. மேலும், தற்போது இந்த சோதனை நடைப்பெற்று வருவதாகவும், வருக்கூடிய காலங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.