விற்பனைக்கு வரும் விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

ஸ்மாட்போன்களின் முன்னணி நிறுவனமாக இருக்கும் விவோ நிறுவனம் தற்போது இந்தியாவில் T1x ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே இந்த போனில் இருப்பதால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் குஷியாகியுள்ளனர்.

இந்நிலையில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸரை மற்றும் 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ இடம்பெற்றுள்ளது. அதோடு 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் போன்றவைகள் இந்த போன்களில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பிரியர்களின் வசதிக்கு ஏற்ப கிராவிட்டு பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ போன்ற ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

என்னதான் புதுப்புது மாடல்களில் ஸ்மார்ட்போன் வந்தாலும் அதன் விலை அதிகமாக இருக்கும் என அனைவரும் நினைப்பார்கள். ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த போன் வருகின்ற ஜூலை 27-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…