இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகின்ற 24-ஆம் தேதியுடம் முடிவடைகிறது. இதனால் புதிய ஜானதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைப்பெற்றது.

அந்த வகையில் பாஜக சார்பில் திரவுபதி முர்மு போட்டியிட்டார். அதே போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸின் யஷ்வந்த் சின்கா எதிர்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார். இந்நிலையில் அனைத்து மாநிலங்களின் சட்டசபைகள் மற்றும் பார்லிமென்டில் ஓட்டுப்பதிவு நடைப்பெற்ற நிலையில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

இந்த சூழலில் தற்போது வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட திரெளபதி  முர்மு முன்னணிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் திரௌபதி முர்மு இதுவரை 5,77,777 வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரின் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக-வினர் இனிப்பு வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…