என்ன விலை அழகே!! விரைவில் விற்பனைக்கு வரும் ஒப்போவின் Reno 8 லீக்ட்…

ஸ்மார்ட்போன்களின் முன்னி நிறுவனமாக இருக்கும் ஒப்போ நிறுவனம் தற்போது ரெனோ 8 சீரிஸ் – ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரெனோ 8 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களை ஒப்போ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, ரெனோ 8 மாடலில் புதிய டிமென்சிட்டி 1300 பிராசஸரும், ஒப்போ ரெனோ 8 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 8 ப்ரோ மாடலில் டிமென்சிட்டி 8100 ஆக்டா கோர் பிராசஸர் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2.85 ஜிகாஹெர்ட்ஸ் ARM கார்டெக்ஸ் A78 சூப்பர் கோர்கள் மற்றும் ARM மாலி G610 MC6 கிராபிக்ஸ் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் 5.0 கேமிங் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன AI-VR கிராபிக்ஸ் வசதியையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. டூயல் லின்க் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ ஆடியோ வசதி மற்றும் வைபை, ப்ளூடூத் தொழில்நுட்பம், ப்ளூடூத் LE ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரெனோ 8 மாடலில் டிமென்சிட்டி 1300 பிராசஸரில் புதிய 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா கோர் CPU அமைந்திருப்பதாகவும், அத்துடன் 3 ஜிகாஹெர்ட்ஸ் ARM கார்டெக்ஸ் A78 இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 4500mAh பேட்டரி மற்றும் ஒப்போ 80 வாட் சூப்பர் வூக் பிளாஷ் சார்ஜ் மற்றும் ஸ்மார்ட்போனை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 11 நிமிடங்களே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.