அசத்தல் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் கேமன் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!!! என்ன விலை தெரியுமா?

வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெக்னோ நிறுவனம் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கேமன் 19 சீரிஸ் போனில் 6.8 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் எல்.இ.டி டிஸ்ப்ளே இருப்பதால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு செல்பி பிரியர்களுக்கு ஏதுவாக கேமான் 19 நியோவில் 48 மெகாபிக்சல் ரியர் கேமராவும், 32 மெகாபிக்சல் என்ற சிறப்பம்சத்தில் கொண்டுவந்துள்ளது.

இதனிடையே இரண்டு போன்களிலும் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன்களின் விலை அதிகமாகதான் இருக்கும் என நினைப்பார்கள்.

ஆனால் எக்கோ பிளாக், சீ சால்ட் ஒயிட் மற்றும் ஜியோமெட்ரிக் கிரீன் போன்ற வண்ணங்களில் கிடைக்கும் இதன்விலையானது ரூ.14 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த போல் அமேசான் தளத்தில் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.