அசத்தல் அம்சங்களுடன் சந்தைக்கு வரும் நத்திங் நம்பர் ஒன்!!

ஸ்மார்போன்களின் பிரியர்களை திரும்பிபார்க்க வைத்த நத்திங் போன் (1) தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சிறந்த கேமரா, திறன்வாய்ந்த ஸ்னாப்டிராகன் புராசஸர், தரமான டிஸ்ப்ளே, ஒளிரும் விளக்குகள் என பல சிறப்பம்சங்களுடன் விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே நத்திங் போன், ஆப்பிள் ஐபோனுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்று அந்நிறுவன கார்ல் பெய் தெரிவித்துள்ளார். அதே போல் சிறந்த கேமரா, திறன்வாய்ந்த ஸ்னாப்டிராகன் புராசஸர், தரமான டிஸ்ப்ளே, ஒளிரும் விளக்குகள் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போனில் திறன்வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ், .55 இன்ச் அமோலெட் 120Hz டிஸ்ப்ளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நத்திங் போன் 1 பின்புறத்தில் பிளாக்ஷிப் 50 மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை கேமரா மற்றும் அதோடு f/1.88 அபெர்ச்சர், 1/1.56” அளவு சென்சார் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட செல்போனை Flipkart மூலம் முன்பதிவு செய்து ஆர்டர் பாஸைப் பெறலாம் என்றும் இந்த பாஸுக்காக நீங்கள் செலுத்தும் ரூ.2,000 கட்டணம் செல்போன் வாங்கும் போது கழிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.