ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த ட்விட்டர் நிறுவனம்..!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார் என தகவல் வெளியாகி உறுதியானது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் சுமார் 100க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
ட்விட்டரை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள எலான் மஸ்க் செலவை குறைக்க இந்த பணி நீக்கம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. ட்விட்டர் கூறுவதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாக ட்விட்டருடன் தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜூன் மாதம் ட்விட்டர் ஊழியர்களுடன் மஸ்க் தனது முதல் சந்திப்பை நடத்தினார். அப்போது நிறுவனம் நிதி ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் செலவைக் குறைக்க வேண்டும் என்றும் கூறினார். இப்போது செலவுகள் வருவாயை விட அதிகமாக உள்ளன என்று மஸ்க் ஊழியர்களிடம் கூறினார்.
இதனால் ட்விட்டர் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு சாத்தியக்கூறு இருப்பதாக ஊழியர்கள் சில அச்சம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ட்விட்டர் தனது ஹெச்ஆர் பிரிவில் இருந்து சுமார் 100க்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி செலவுகளைக் குறைக்க ஏற்கனவே புதிய ஊழியர்களை தேர்வு செய்யும் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது