வாழ்க்கையின் மீது கவனத்தை செலுத்துங்கள் – மார்டின் கூப்பர்

உலகின் முதல் செல்லுலார் போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் அண்மையில் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி உள்ளார். அதாவது ஒருவர் சராசரியாக தன்னுடைய நாளில் 4.8 மணிநேரத்தை செல்போன் பயன்படுத்துவதில் செலவிடுகிறார் என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், உலகின் முதல் செல்போனை உருவாக்கிய மார்டின் கூப்பரிடம் தனியார் சேனல் கடந்த வாரம் பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில், தன்னுடைய ஒரு நாளில் ஐந்து சதவீத நேரத்தை மட்டும் செல்போனில் செலுத்துவதாக மார்டின் கூப்பர் கூறியிருக்கிறார்.

Inventor Of Cell Phone: 'We Are Just Getting Started' | Here & Now

அப்போது அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் செல்போனில் தங்களுடைய நேரத்தை செலவிடுவோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது .உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள் என கூறியிருக்கிறார்.

Martin Cooper, who invented the cell phone, on their future - Protocol

மேலும் நீங்கள் செல்போனில் குறைவான நேரத்தையும், வாழ்க்கையில் அதிக நேரத்தையும் செலவிட வேண்டும்’ என மார்டின் கூப்பர் கேட்டுக்கொண்டுள்ளார். மோட்டோரோலா போன் தயாரித்துக் கொண்டிருந்த போதே முதல் கையடக்க போலீஸ் ரேடியோ உட்பட தயாரிப்புகளை கண்டுபிடிக்கவும் மார்டின் கூப்பர் உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக பல தொலை தொடர்பு சாதனங்களை கண்டுபிடித்தவர் தான் தற்போது மக்களை தங்கள் வாழ்க்கையின் மீது கவனத்தை செலுத்தும்படி கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.