அசத்தல் தள்ளுபடியுடன் சந்தைக்கு வந்தது சாம்சங் கேலக்ஸி F13 ஸ்மார்ட்போன்!!

ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமாக இருப்பது சாம்சங். இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது F சீரிஸ் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இதற்கு F13 என பெயரிடப்பட்டு நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடலானது சாம்சங் கேலக்ஸி M13 மாடலைப் போன்று இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிங்க், புளூ, கிரீன் ஆகிய மூன்று நிறங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. அதோடு சாம்சங் கேலக்ஸி F13 முழு ஹெச்டி + எல்சிடி பேனலுடன் கூடிய 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்நிலையில் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பும், முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், புது மாடல் ஸ்மார்ட்போன் வந்தால் அதிகமாகதான் விலை இருக்கும் என பலரும் நினைப்பர். ஆனால் தற்போது வந்துள்ள மாடலானது ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.11,999 என்றும், 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 என சாம்சங் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இதனை பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *