கூகுள் நிறுவனத்தின் அசத்தல் அப்டேட்..!! இன்டர்நெட் இல்லாமல் மெயில் அனுப்பலாம்..!!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தலைமையிடமாகக் கொண்டு கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜிமெயில் என்பது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த மின்னஞ்சல் செயலி ஆகும்.
ஜிமெயிலில் ஆஃப்லைனில் மின்னஞ்சல் அனுப்பும் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டின் நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் வாடிக்கையாளர்களின் மார்க்கெட் பங்குகளில் கூகுளின் ஜிமெயில் சேவையானது 18 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
மக்களில் சுமார் 75 சதவீதம் பேருடைய மொபைல் போன்களில் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வபோது புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வரும் ஜிமெயில் நிறுவனம் புதிதாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது ஆஃப்லைன் ஜிமெயில் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஆஃப்லைன் சேவையை பயன்படுத்தி இன்டர்நெட் வசதி இல்லாமலே இமெயில்களை படிக்கவும், பதில் அளிக்கவும், ஜிமெயில் மெசேஜ்களை தேடவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை தொலைதூரப் பகுதிகளில் நல்ல பலன் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இணைய வசதி இல்லாத கிராமப்புற பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இந்த ஆஃப்லைன் சேவை உதவிகரமாக இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.