விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்..!! வருத்தத்தில் அதன் ரசிகர்கள்..!!
உலகின் முன்னணி தேடுபொறியாக இருந்த Internet Explorer ஐ நிரந்தரமாக மூட முடிவெடுத்து உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2003 இல் 95% பயனர் பங்குடன் உச்சத்தை தொட்ட நிலையில் இன்றுடன் (ஜூன் 15 ) அதன் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதன் பயனாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கம்ப்யூட்டர் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அதனுடனே பயணித்த தேடுபொறுதான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கூகுளின் குரோம் வந்த பிறகு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. மற்ற பிரவுசர்களை காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செயல்பாட்டின் வேகம் குறைவாக இருப்பதால் அதை இயங்கியது பயனர்களுக்கு கடினமாக இருந்தது.
அதன் பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான Internet Explorer சில அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வந்தது. அதன் பின் 1996 இல் ஜாவாஸ்கிரிப்ட் புரோகிராம் செய்யப்பட்டு JPEG கள் மற்றும் GIF களைப் பார்க்க பயனர்களை அனுமதித்தது.
இருந்தும் அதன் பயன்பாடு வளர்ச்சி பெறாத நிலையில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மோட் இருப்பதால் பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பல வருடங்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளது. தற்போது நம்பர் ஒன் தேடுபொறியாக இருக்கும் குரோம் போன்றவற்றிற்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.