5ஜி சேவைக்கான உரிமம்! இழப்பை சந்திக்குமா ஏர்டெல், ஜியோ ?
தகவல் தொடர்பு நிறுவனங்கள் அல்லாத பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 5ஜி வைஃபை ஹாட்ஸ்பாட் சேவை வழங்கும் உரிமையை அளிக்க ஒன்றிய அமைச்சரவைக்கு ஒன்றிய தகவல் தொடர்புதுறை அமைச்சகம் பரிந்துறை செய்துள்ளது.
5ஜி வைஃபை ஹாட்ஸ்பாட் சேவை வழங்கும் உரிமையை கூகுள், அமேசான், டிசிஎஸ், சிஸ்கோ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்பது என்பது ஒன்றிய அமைச்சகத்தின் பரிந்துரை ஆகும். இந்த சேவைக்கான உரிமம் வழங்குவது மூலம் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகம் பெருகும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அதே நேரம் 5ஜி சேவையை வழங்க காத்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகிராம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க கூடும் என தெரிகிறது. தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அமைச்சரவை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் சேவையை வழங்க பிற நிறுவனங்கள் பிற நாடுகளில் 5 ஜி சேவையை வழங்கி வருகின்றனர். கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு 5ஜி சேவை உரிமம் வழங்க அனுமதிக்கப்பட்டால் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 5ஜி சேவை எளிதில் கிடைக்கும்.