அசத்தல் அம்சங்களுடன் சந்தைக்கு வருகிறது சியோமி பேண்ட் 7: எப்போது தெரியுமா?

வளர்ந்து வரும் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப ஸ்மார்ட்போன் அறிமுகங்களும் புது புது மாடல்களில் உலாவருகிறது. அந்த வகையில் சியோமி பேண்ட் 7 மாடல் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அதே போல் மற்ற சாதனங்கள் தயாரிப்பதில் அந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனிடையே சியோமி பேண்ட் 7 மாடல் மற்ற முந்தைய மாடல்களை போலவே காட்சியளிக்கும் என்றும் முந்தைய வெர்ஷன்களை போன்று தற்போது இந்த ஸ்டாண்டர்டு, NFC என இரண்டு வெர்ஷன்களில் அறுமுகம் செய்யவுள்ளதாக இந்த பேண்ட் நாளை மறுநாள் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில் மற்ற பேண்ட் மாடல்களை ஒப்பிடுகையில் தற்போது வர இருக்கும் மாடல் 1.62 இன்ச் AMOLED 192×490 பிக்சல் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது முந்தைய பேண்ட் 6 மாடலில் இருப்பதை விட 25 சதவீதம் பெரியது என்பது முக்கிய சிறப்பம்சமாகும்.

மேலும், ஒரு நபரின் ஆரோக்கியத்தை டிராக் செய்வதற்கு இந்த பேண்ட் 7 மாடல் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்படலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேண்ட் 7 மாடல் மூலமாக இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங், SpO2 போன்ற பல்வேறு உடல் ஆரோக்கியத்தை தெரிவிக்கும் விதமாக சியோமி பேண்ட் 7 மாடல் அமைவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *