இனி டிரம்ப்-க்கே என்னுடைய ஓட்டு – ட்விட்டரை கலக்கும்  எலான் மஸ்கின் ட்வீட்

உலகின் முதல் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் அதிக முதலீடுகளை செய்து ட்விட்டரை வாங்க போவதாக அறிவித்தார். ஆனால் ட்விட்டரில் அதிகமாக போலி கணக்குகள் இருப்பதால், ட்விட்டரை முழுவதும் வாங்குவது குறித்து யோசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் போஸ்ட் செய்த ஒரு டீவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பதிவிட்ட  ட்வீடில், “கடந்த தேர்தலின் போது நான் ஜனநாயக கட்சிக்கு வாக்கு செலுத்திருந்தேன். அவர்கள் மக்களிடம் பணிவாக நடந்து கொண்டதற்காக நான் அவர்களுக்கு வாக்கு செலுத்தினேன். ஆனால் தற்போது அவர்கள் வெறுப்பு அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இனி நான் ஜநாயக கட்சிக்கு பதிலாக குடியரசு கட்சிக்கு தான் ஆதரவு தர போகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறியுள்ளது. அவர் வெளியிட்ட டிவீட்க்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *