அசத்தல் அம்சங்களுடன் சந்தைக்கு வரும் Z போல்டு 4: எப்போது தெரியுமா..?

மொபைல்போன் நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது சாம்சங். இந்நிறுவனம் Z போல்டு 4 மாடலை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா மற்றும் S22 சீரிஸ் மாடல்களில் இருக்கும் லென்ஸ் Z போல்டு 4 மாடலில் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதனிடையே S22 சீரிஸ் மாடல்களில் இருக்கும் ரெசல்யூஷனை அதிகம் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 10MP டெலிபோட்டோ கேமரா, 3X ஆப்டிக்கல் ஜூம் செய்யும் வசதி, 12MP டெலிபோட்டோ லென்ஸ், 3 பிரைமரி கேமரா வசதிகள் மற்றும் S பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *