மக்களிடம் பணம் பறிக்க எஸ்.எம்.எஸ் யுக்தியை கையாளும் மோசடி கும்பல்.. 

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பல பிரச்சனைகள் மக்கள் சந்தித்து வருகிறது. சமீபத்தில் கூட அசாம் சிபிஐ அதிகாரிகள்  இரண்டு தொலைபேசி எண்கள் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்  ஒரே ஒரு எஸ்எம்எஸ் மூலம் 1.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. எஸ்எம்எஸ் பார்த்த நபர் அந்த லீக்கை கிளிக் செய்து உள்ளே சென்று அவருடைய தகவல்கள் நிரம்பிய நிலையில் அவருடைய கணக்கில் இருந்த மொத்த பணமும் திருடியுள்ளனர். 

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இவரது செல்போனுக்கு கடந்த 11ஆம் தேதி எஸ்பிஐ வங்கி என்ற பெயரில் தங்களது பான் கார்டை புதுப்பிக்கும் படி ஒரு செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி நான்கு இலக்க எண்ணை நிரப்ப கோரி விண்ணப்பம் வந்தது. இதை தொடர்ந்து அவர் கேட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, பின்னர் அவரது செல்போனுக்கு ஒரு ஓடிபி வந்துள்ளது.

அதையடுத்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 72 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று தவணையாக படம் எடுக்கப்பட்டதாக  குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கி பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி பணம் எடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எனவே மக்களே வங்கி பெயரில் குறுஞ்செய்தி வந்தால் அதை கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும் என்று வங்கி தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *