கனவுக்கு உயிர் கொடுப்பாரா எலான் மஸ்க்

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், மனிதர்களை எப்படியாவது மார்ஸ் கிரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து கொண்டிருப்பது என்பது உலகம் அறிந்த செய்தி. இந்நிலையில் அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் மனிதர்கள் எப்படி செவ்வாய் கிரகத்திற்கு செல்லுவார்கள் என்பதை காட்ட ஒரு அனிமேஷன் காணொளி காட்சியை தந்து ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அது இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த காணொளி காட்சியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை இடத்திலிருந்து ஒரு ராக்கெட் புறப்படுகிறது. இந்த ராக்கெட்டானது துப்பாக்கி முனை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் பூமியிலிருந்து கிளம்பி செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கிறது.இதுகுறித்து எலான் மஸ்க் தெரிவித்தது, “இந்த ஸ்டார்ஷிப் ஏவுதல் $10 மில்லியனுக்கும் குறைவான செலவிலே முடிந்துவிடும்,இல்லையென்றால் ஒரு சில மில்லியன் டாலர்கள் கூடுதலாக வரும் அவ்வளவுதான்  என்று மஸ்க் மதிப்பிட்டுள்ளார். இது இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…