முடங்கிய ட்விட்டர்…! மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தளம்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சேவை,உலகம் முழுவதும்நேற்று முடங்கியது.இதனால்,ட்விட்டர் பயனர்கள் கடும் அவதி.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சேவை உலகம் முழுவதும் நேற்று முடங்கியது.குறிப்பாக,இந்தியாவிலும் பல பயனர்களுக்கு ட்விட்டர் சேவை முடங்கியதாக தெரிய வந்துள்ளது.குறிப்பாக,இந்திய நேரப்படி நேற்று இரவு 10.43 மணிக்கு ட்விட்டர் முடங்கியதாகத் தகவல் வெளியாகியது.இதனையடுத்து,இணைய பயன்பாட்டை கண்காணிக்கும் அமைப்பான டவுண்டிடெக்டர் வெளியிட்டிருக்கும் தகவலின்படி,அமெரிக்காவில் 40,000 பயனர்,இந்தியாவில், 2,018 பயனருக்கும் மேற்பட்டோர் என பலரும் ட்விட்டர் கணக்கு முடங்கியது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு ட்விட்டரின் முகப்பு பக்கம் வந்தாலும்,ரீ ட்வீட் அல்லது பிறரின் ட்வீட்டை படிப்பது போன்ற அடிப்படை அம்சங்களை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.இதற்கு சர்வர் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து,ட்விட்டரில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப பிழை சரி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,வலைதளம் முடங்கியதற்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பும் கோரியது.இது தொடர்பாக,ட்விட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறுகையில்:

“நாங்கள் ஒரு தொழில்நுட்ப பிழை சரி செய்துள்ளோம்.தற்போது மீண்டும் ட்விட்டர் இயல்பு நிலைக்கு வந்துள்ளது.சிரமத்திற்கு மன்னிக்கவும்”,என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…