தப்ப கண்டுபிடிச்சா இவ்ளோ காசா!! கூகுளில் உள்ள தவறை கண்டுபிடித்ததற்காக  87 லட்சம் பெற்ற நபர்

கூகுள், ஆப்பிள் பேஸ்புக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கும்  ஆப்-களிலோ அல்லது தயாரிப்புகளிலோ தவறு(bugs) எதாவது கண்டுபிடித்து அந்நிறுவனங்களுக்கு சொன்னால்,  ஒரு கணிசமான தொகை வழங்கப்படும். 

அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் பிழைகள்(bugs) கண்டுபிடித்து புகாரளித்த ஆராய்ச்சியாளர்களுக்கு, கூகுள் நிறுவனம்  8.7 மில்லியன் டாலர் மதிப்பு வெகுமதிகளை வழங்கியுள்ளது. பக்ஸ்மிரரின் (Bugs Mirror)நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரியான இந்தூரைச் சேர்ந்த அமன் பாண்டே தான் அதிக தொகை பெற்றுள்ளார்.அமன் பாண்டே இதுவரை 220 பக்ஸ்-களை கண்டுபிடித்தது சுமார் $296,000 தொகையை பெற்றுள்ளார்.அதேபோல கடந்த 2019-ம் ஆண்டு அமன் பாண்டேவின் பக்ஸ்மிரரின் நிறுவனம் , கூகுலின் ஆண்ட்ராய்டு VRP  தளத்தில்  280 பக்ஸ்-களை கண்டுபிடித்துள்ளது.

அமன் பாண்டே போபாலில் உள்ள NIT  கல்லூரி படித்தவர்.இவரது நிறுவனம் கூகுள், ஆப்பிள், பேஸ்புக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு  கூடுதல் பாதுகாப்பு வசதியே வழங்கி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…