டைம் முடிஞ்சு .. இனி இது தேவையில்லை – 2030-ம் ஆண்டு காலாவதியாகும் ஐ.எஸ்.எஸ்

பல சர்வதேச விண்வெளி அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 2030 ஆம் ஆண்டு இறுதியில் செயலிழந்து ஓய்வு பெற இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த உடன் விண்வெளி மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டிருக்கிறது என கூறப்படுகிறது.

2030 ஆம் ஆண்டில் இதற்கான பணி தொடங்கும் என நாசா திட்டமிட்டிருக்கிறது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் பாயிண்ட் நெமோ என்று அழைக்கப்படும் இடத்தில் அது விழும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விண்வெளி குப்பைகளில் ஒன்றாக சர்வதேச விண்வெளி மையம் மாறும் என கூறப்படுகிறது. முன்னதாக ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட நாடுகளின் 263-க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகள் கடலில் புதைக்கப்பட்டுள்ளதாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் ஆனது அதன் செயல்பாட்டின் இறுதி தசாப்தத்தை நோக்கி செல்கிறது. நாசா அதை வணிக நடவடிக்கைகளுக்காக திறக்க திட்டமிட்டிருக்கிறது. எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல தனியார் ஆய்வு நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் விண்வெளி பொருளாதாரத்திற்காக செலவிட்டு போட்டியிடுகின்றன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னதாகவே ஆயிரக்கணக்கான சிறிய செற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி இருக்கிறது. அதேபோல் ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவனம் விண்வெளி சுற்றுலா தளங்களில் போட்டியிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தொடர்ந்து மாற்றத்திற்கான நடவடிக்கையை தொடங்க நாசா முன்னதாகவே திட்டமிட்டுவிட்டது. டிசம்பர் 2021 ஆம் ஆண்டு வெளியான செய்திக் குறிப்பில், ப்ளூ ஆர்ஜின், நானோராக்ஸ் மற்றும் நார்த்ராப் க்ரம்மன் ஆகிய மூன்ரு நிறுவனங்களுடன் பூமியின் சுற்றுப்பாதையில் தனியார் விண்வெளி நிலையங்கள் உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக நாசா குறிப்பிட்டது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…