சூப்பரா இருக்கே! யூடியூப் ஸ்ட்ரீமிங் பிளேயரை மாற்றி வைத்த கூகுள்

கூகுள் நிறுவனத்தின் வலைத்தளமான யூடியூப் மொபைல் வெர்ஷனில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட வீடியோ பிளேயரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பிளேயரில் உள்ள புதிய பட்டன்கள், பயனாளர்களின் அணுகுமுறை எளிதாகிறது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், வீடியோ பூல் ஸ்கீரின் மோடில் பார்க்கும்போதும், பட்டன்கள் தோன்றும் வகையில் வடிவைத்துள்ளனர்.

வீடியோ பார்க்கையில் Pause அல்லது Tap செய்தால் மட்டுமே பட்டன் திரையில் தோன்றும். இல்லையெனில், மறைந்திருக்கும் வகையில் டிசைன் செய்துள்ளனர். முக்கியம்சமாக லைக் மற்றும் டிஸ்லைக் பட்டனும், ரைட் சைட்டிலிருந்து ஸ்மால் சைட்பாரில் கமெண்ட்ஸ் ஓப்பனாகி படிக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக, வீடியோவை ஷேர் செய்திட தனி பட்டனும், பிளேலிஸ்டில் Save பட்டனும், கீழவே வலது பக்கம் ஒரத்தில் பல வீடியோக்களை காண தனி வசதி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து வசதிகளும் ஏற்கனவே யூடியூப் தளத்தில் இருந்தாலும், அவற்றை செய்திட Full Screen வீடியோ மோடை Exit கொடுத்து தான் செய்ய முடியும். ஆனால், தற்போதைய புதிய பிளேயரில் Full Screen-இல் இருந்தப்படியே அவற்றை அணுகும் வசதி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பிரத்யேக வீடியோ பிளேயர், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு கிடைக்கவுள்ளது. ஆனால், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வெளியாகவில்லை. அதாவது, இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைத்திட, சிறிது நாள்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இதுதவிர, யூடியூப் நிறுவனம் புதிதாக looping வசதியை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்தால், வீடியோஸை மீண்டும் பார்த்திட பிளேபேக் ஸ்லைடரை நகர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. தானாகவே வீடியோ Loop செய்யப்பட்டு பிளேயரில் பார்த்திட முடியும்.

யூடியூப் தளத்திற்கு கோடிக்கணக்கில் பயனாளர்கள் இருப்பதால், புதிய அப்டேட் பயனாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…