1 கோடி subscriber-களை கொண்ட நரேந்திர மோடி

தற்போதுள்ள நவீன உலகத்தில் நமக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் நாம் யூடியூப் தளத்தில் இருந்தே கற்று கொள்ளலாம். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஒரு சாமானிய மனிதரும் இணையத்தை உபயோகப்படுத்த முடிகிறது என்றால் அம்பானியின் ஜியோ நிறுவனம் தான் காரணம்  என்று கூறினால் அது மிகையாகாது.2017-ம் ஆண்டு அம்பானியின்  ஜியோ நிறுவனம் 4g இணைய சேவையை மக்களுக்கு இலவசமாக வழங்கியது. இதுவே இந்தியாவில் இணையத்திற்கான வளர்ச்சியை வித்திட்டது. இந்த இணையத்தின் மூலம் பல பேருடைய வாழ்க்கை நேரடியாக மாறியுள்ளது.

குறிப்பாக சொல்ல போனால் யூடியூபின் அபார வளர்ச்சி யாருமே எதிர்பார்க்காத ஒன்று.  மேலும் யூடியூபில் வீடியோ பதிவிட்டு சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. வேலைக்கு போக பிடிக்காதவர்கள், தங்களது வேலையை விட்டுவிட்டு அவர்களுக்கு பிடித்த வேலையை செய்து  அதனை வீடியோவாக எடுத்து  யூடியூப் பதிவிட்டு சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். இதனால் தான் மக்களிடம் யூடியூப் பெரும் வரவேற்பை பெற்றது.

பத்து  ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இளைஞர்களிடம் எப்படி பேஸ்புக்,ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு இருந்ததோ, அது போல தற்போது உள்ள இளைஞர்களிடம் யூடியூப் தளத்தில் கணக்கு  வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்போது இளைஞர் மட்டும் தான் தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை, சாமானியர்கள் முதல் பிரதமர் வரை என அனைவரும் யூடியூபில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் 1 கோடி subscriber-களை கடந்துள்ளது  பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல். மேலும் உலக நாடுகளில் உள்ள  தலைவர்களிலே அதிக எண்ணிக்கையில் subscriber-களை கொண்ட யூடியூப் சேனல் என்ற சாதனையையும் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…