ஆங்கர் குழுமத்தின் வயர்லஸ் இயற்போன்!

 மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆங்கர் குழுமத்தின் அங்கமான சவுண்ட்கோர் நிறுவனம் புதிதாக லைப் நோட் 3 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இது நவீன சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டதாகும்.

ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் வழங்குவதோடு வீடியோகேம் விளையாடும் போது தேவையான ஒலி உள்ளிட்டவற்றை துல்லியமாக அளிக்கும். இது ப்ளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. காது மடலினுள் சரியாகப்பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் உள்ளதால் இதில் இனிமையான இசையை தொந்தரவின்றி கேட்டு மகிழ முடியும்.

சாலைப் பயணம், வெளி இடங்களில் இருப்பது மற்றும் உள்ளரங்குகளில் இருப்பது போன்ற சூழலுக்கு ஏற்ப இதன் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் வகையில் மூன்றுவித தேர்வு நிலைகள் உள்ளன. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த இயர் போனின் விலை சுமார் 7,999 ஆகும்

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…