பறக்கும் படகை அறிமுகம் செய்த துபாய் 

திரைப்படங்களில் வருங்காலத்தை காண்பிக்க வேண்டுமென்றால், அதிநவீன தொழில்நுட்பங்களை  சாதாரண மக்கள் பயன்படுத்துவது , பறக்கும் கார்களை காட்டுவது, பறக்கும் படகை காட்டுவது  போன்றவற்றை காண்பிப்பார்கள்.அத்திரைப்படங்களில் காண்பிக்கப்பட்ட அனைத்தும் தற்போது உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது.துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு தி ஜெட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நீர் வழியில் அதிவேகமாக செல்லக் கூடிய அளவில் இந்த படகு தயாரிக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதை அடுத்து தற்போது தி ஜெட் ஹைட்ரஜன் எரிவாயு படகின் பயன்பாட்டிற்கு துபாய் அனுமதி அளித்துள்ளது.

சொகுசு படகாக உருவாக்கப்பட்டுள்ள இதில் 8 முதல் 12 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது.ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் இதில் இருந்து புகை போன்ற உமிழ்வுகள் வெளியேறுவதில்லை. இந்த படகு இயங்கும் போது சத்தம் வரவில்லை என்பதுடன் நீர் பரப்பிற்கு 80 செமீ மேலே மணிக்கு 75 கிமீ வேகத்தில் பறந்து செல்லும். ஹைட்ரஜன் எரிசக்தியால் இந்த படகு இயங்குவதால் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. விரைவில் துபாய் கடல் பகுதியில் இந்த ஜெட் படகு பயணிகளை மகிழ்விக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…