ஃபோன்பேயில் ரீசார்ஜ் செய்தால் தனி கட்டணம் வசூலிக்கப்படும்

வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான ஃபோன்பே, 50 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 1 முதல் 2 ரூபாய் வரையிலான செயலாக்க கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
யுபிஐ அடிப்படையில் கொண்ட இந்த பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய முதல் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி இந்த நிறுவனத்துடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது . மற்ற போட்டியாளர்களைப் போலவே, ஃபோன்பேயும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
‘ரீசார்ஜ்களில், நாங்கள் ஒரு சிறிய அளவிலான பரிசோதனையை இயக்குகிறோம். அங்கு ஒரு சில பயனர்கள் மொபைல் ரீசார்ஜ்களுக்கு பணம் செலுத்துகின்றனர். ரூ.50-க்கு குறைவான ரீசார்ஜ்களுக்கு கட்டணம் இல்லை. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.1 மற்றும் ரூ.100க்கு மேல் ரூ.2 வசூலிக்கப்படுகிறது.
அடிப்படையில், இந்த சோதனையின் ஒரு பகுதியாக, பெரும்பாலான பயனர்கள் எந்தத் தொகையும் செலுத்தவில்லை அல்லது 1 ரூபாய் மட்டுமே செலுத்துக்கொன்றனர்’ என்று ஃபோன்பே செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் யுபிஐ பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ஃபோன்பே மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 165 கோடிக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது.
பில் பேமென்ட்டுகளை தெளிவுபடுத்துவதற்காக, ‘நாங்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் அல்லது செயலி அல்ல. பில் பேமென்ட்டுகளில் ஒரு சிறிய கட்டணத்தை வசூலிப்பது இப்போது ஒரு நிலையான தொழில் நடைமுறை. இது மற்ற பில்லர் வலைத்தளங்கள் மற்றும் கட்டண தளங்களால் பின்பற்றப்படுகிறது. கிரெடிட் கார்டுகளுடன் மட்டுமே பணம் செலுத்துவதற்கு நாங்கள் செயலாக்கக் கட்டணத்தை (மற்ற தளங்களில் வசதியான கட்டணம் என்று அழைக்கிறோம்) வசூலிக்கிறோம்’ என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.