இந்தியாவில் டெஸ்லா கார்கள்

இந்தியாவில் பெட்ரோல் டீசலின் விலை தங்க விலைக்கு விற்பதால் மக்கள் அனைவரும் மின்சார வாகனத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவனம் பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு முதல் இந்தியாவில் மின்சார கார்களை இறக்குமதி செய்ய டெஸ்லா நிறுவனம் விரும்புகிறது. ஆனால் உலகிலே அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்பது கவலை அளிக்கிறது என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், டெஸ்லா கார்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களின் முதலீட்டை கெடுத்து விடும் என உள்ளூர் நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன. இதனிடையே கடந்த மாதம் டெஸ்லா நிறுவனத்தின் இந்திய தலைவர் மனோஜ் குரானா உட்பட நிர்வாகிகள் சிலர், பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ரகசிய சந்திப்பில் வரி குறைப்பு பற்றி பேசியுள்ளனர். அப்போது இந்தியாவில் உள்ள வரி கட்டமைப்பு டெஸ்லா வணிகம் செய்வதற்கான திட்டத்திற்கு ஏதுவாக இல்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின்சார வாகனங்களுக்கு 60 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதாவது 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இதனால் டெஸ்லா கார்கள் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஒருவேளை டெஸ்லா கார்கள் இந்தியாவில் விற்க அனுமதி கிடைத்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு டெஸ்லா நிறுவனம் சில உறுதிமொழிகளை தரவேண்டுமென்று என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர் .