கன்னடருக்கு இங்கு என்ன வேலை… அண்ணாமலையை வறுத்தெடுத்த இளைஞர்

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அண்ணாமலை பாஜகவில் இணைவதற்கு முன்னர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தான் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார்.
தனது பதிவியை ராஜினாமா செய்த பின்னர் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய அண்ணாமலை, “ நான் பிறந்தது வேண்டுமானால் வேறு இடமாக இருக்கலாம். ஆனால், என்றும் நான் கன்னடன் தான்” என்று பேசியிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
தமிழ்நாடு மாநிலத் தலைவராக அண்ணாமலை நாளை(16.7.2021) பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை உரையாற்றிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர், “ அப்போது கன்னடர் என்று கூறி விட்டு இங்கு என்ன செய்கிறீர்கள்” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதால் அந்த இளைஞரை அக்கட்சியினர் அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.