இனி கார் வாங்க முடியுமா? மாருதி சுசுகி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் அனைத்து வகையான கார்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாருதி நிறுவனம் பங்கு சந்தையிடம், ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் கார் தயாரிப்பிற்கான பல இடு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதனை ஈடுகட்டுவதற்காகப் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது.
அதன்படி, மொத்த செலவீனங்களைக் கணக்கிட்டு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து விலை உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாருதி நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவால் கார் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால், என்னென்ன மாடல் கார்களுக்கு விலை உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்படவில்லை.