இன்போசிஸ் சிஇஓ-வின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக்கின் சம்பளம் ரூ.49 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இவர் பெற்ற சம்பளத்தைக் காட்டிலும் இந்த புதிய சம்பளம் 44 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இவரின் சம்பளம் ரூ.34 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.49 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தத் தகவல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இவரது சம்பள உயர்விற்கு காரணம் அவரிடம் உள்ள பங்குகளை விற்றதே ஆகும்.
2020-ம் நிதி ஆண்டில் 17 கோடி ரூபாய்க்கு மட்டுமே பங்குகளை விற்பனை செய்திருந்தார். ஆனால், கடந்த நிதி ஆண்டில் 31 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றிருப்பதால் சம்பளம் உயர்ந்திருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சராசரி பணியாளர்களின் சம்பளம் 7.2 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இந்த நிலையில், பணியாளர்களின் சராசரி சம்பளத்துக்கும் தலைமைச் செயல் அதிகாரியின் சம்பளத்துக்கும் உள்ள விகிதம் 689:1 ஆக இருக்கிறது.