ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்…ரீசார்ஜ் பண்ணலனாலும் இலவசமா?

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொரோனா காலத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக அவுட்கோயிங் கால்களுக்காக 300 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ரீச்சார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காலம் முழுவதும் மாதம் 300 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்கள் இலவசமாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே ரீச்சார்ஜ் செய்தவர்களுக்கு டபுள் மடங்கு பயன்கள் கிடைக்கும்.
அதாவது, ஜியோபோன்களுக்கு 75 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தாலும், கூடுதலாக 75 ரூபாய்க்கான பயன்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் சேவைகள் கிடைக்க வேண்டுமென விரும்புவதாக ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
எனினும், வருடாந்தர திட்டங்களுக்கு ரீச்சார்ஜ் செய்தவர்களுக்கு கொரோனா கால சலுகைகள் பொருந்தாது என ஜியோ நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.