வீடியோ ம்யூட் வசதி ; வாட்ஸ் அப் நியூ அப்டேட்
இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் தவறாமல் வாட்ஸ் அப்பும் இடம்பெற்று விடும். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பை வாங்கியதில் இருந்து பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது, நாம் வீடியோவை மற்றவர்களுக்கு அனுப்பும் போது, ம்யூட் செய்து அனுப்பிக் கொள்ளும் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்டு மொபைகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ் அப் செயலியை தொடர்ந்து அப்டேட் செய்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.