விரைவில் வெளியாகிறது ஜியோ லேப்டாப்!

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் நாளுக்கு நாள் உயரமாக பறந்து வருகிறது ஜியோ நிறுவனம். ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின் ஏர்செல், ஐடியா என பல நிறுவனங்கள் காணாமல் போயின. ஏர்டெல் உள்ளிட்ட ஒருசில நிறுவனங்கள் களத்தில் இருக்கின்றன.
எனினும் அனைத்திற்கும் மாறாக ஜியோ நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட், புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ‘ஜியோ புக்’ என்ற மலிவு விலை மடிக்கணினியை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் இந்த லேப்டாப் சந்தையில் அறிமுகமாகும் என அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விண்டோஸ் ஆப்பிரேட்டிங் சிஸ்டெம் இல்லாமல் ஜியோ ஆப்பிரேட்டிங் சிஸ்டமில் இந்த லேப்டாப் இயங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது மக்கள் அன்றாம் பயன்படுத்தும் குரோம் புக் போல இந்த ஜியோ புக் இயங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இது ஜியோ நிறுவனத்தின் படைப்புகளில் புதிய மைல்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் இதனையடுத்து அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் அதற்கு இது ஒரு முன்னோட்டம் எனவும் கூறப்படுகிறது.
முதல்கட்டமாக எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலான மிட் சைஸ் லேப்டாப் மாடலாக இது வெளியாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கொரோனா பொதுமுடக்கம் லேப்டாப் மாதிரியான போர்ட்டபுள் கணினிக்கு தேவை இருப்பதால் ஜியோ இதில் முதலீடு விரும்புதாகவும் தெரிகிறது. எனவே இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.