விண்வெளித்துறையில் இந்தியா-பிரேசில் புதிய உச்சம்
இன்று PSLV C-51 ராக்கெட்டானது வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.இதில் பிரேசில் நாட்டின் அமேசானியா-1-யையும் சேர்த்து மொத்தமாக 19 செயற்கை கோள்களை சுமந்து சென்றது PSLV C-51.இதனையடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நியூ ஸ்பேஷ் இந்தியா மற்றும் இஸ்ரோ-விற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியா – பிரேசில் இடையே விண்வெளி தொடர்பான உறவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பிரேசில் அதிபர் ஜார் போல்சன்ராவுக்கும் தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.தன்னுடைய மற்றொரு பதிவில் இரு நாடுகளுக்கு இடையே விண்வெளித்துறையில் வரலாற்றில் புதிய உச்சத்தை அடைந்துள்ளோம் எனவும் பதிவிட்டுள்ளார்.மேலும் பிரேசில் நாட்டின் அறிவியல் அறிஞர்களுக்கும் பிரதர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இவை தவிர இவ்விரு நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஜி-20,இப்ஸா, மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் இந்தியா-பிரேசில் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.