இந்தியாவின் முதல் சி.என்.ஜி டிராக்டர் அறிமுகம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலக்ட்டிரிக் வாகனங்கள் மற்றும் குறைவான எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அந்தவகையில், இந்தியாவில் முதல் முறையாக டீசலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்ட டிராக்டரை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த வாகனத்தை பயன்படுத்தும் விவசாயிகள் எரிபொருளுக்காக செலவிடும் தொகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும் என கூறியுள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர், வி.கே.சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விவசாய கழிவுகளில் இருந்து தாயாரிக்கப்பட்டுள்ள சி.என்.ஜி தயாரிக்கப்படுகிறது.மேலும், இது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, பெட்ரோல், டீசல் விலையை விட 40 சதவீதம் குறைவாக இருக்கும்.

விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் அதிக பயன் பெறுவர். அதிலும், பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொடும் நிலையில் சிஎன்ஜி வாகனங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு பின்னடைவாக இருப்பது எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது தான்.

இதனால், சிஎன்ஜி வாகனங்களுக்கு மாறும் விருப்பம் கொண்ட விவசாயிகளுக்கும், எரிபொருள் நிலையங்கள் இல்லாதது தடையாக உள்ளது. விரைவில் எரிபொருள் நிலையங்களை அதிகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…