ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கூடுதலாக தகுதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் தகுதி விண்ணப்பத்தில் இந்த ஆண்டு கூடுதலாக சில தகுதிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..

மதுரை மாவட்டத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்று முதல்  ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதிச் சான்றிதழுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என – கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அறிவிப்பு

சென்ற ஆண்டு 2023-ல்  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு விண்ணப்பத்தில் இனம், வயது, நிறம், உயரம் மட்டுமே தகுதியாக கேட்கப்பட்டது.

இந்த ஆண்டு 2024 ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வரிசை, கொம்புகளின் இடையே உள்ள தூரம், வலது- இடது கொம்புகளின் உயரம், உள்ளிட்டவை  சேர்க்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் காளையின் உரிமையாளர், உதவியாளர் மற்றும் போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளையின் புகைப்படத்துடன் விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த ஆண்டு அதில் சில மாற்றத்துடன் ஜல்லிக்கட்டு காளை ஒரு பக்கமாக நின்றபடி திமில் நன்றாக தெரியும்படி இருக்க வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது..

மேலும் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க  அறிவிப்பு வெளியீடு

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மற்றுடன் புகைப்படம் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் உறுதிமொழி வழங்க கால்நடைத்துறை விண்ணப்பம் வெளியீடு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திங்கள் முதல் தமிழர்களின் பாரம்பரிய  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் .

அதனைத் தொடர்ந்து மதுரையின் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை சார்பில் தகுதிச் சான்று வழங்க விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. 

இணைய வழி மூலம்  விண்ணப்பத்தினை தரவு செய்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு திமில் தெரியும் வகையிலும் மாட்டின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் உடன் புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அருகில் இல்ல கால்நடை மருத்துவமனைகளில் கொடுத்து மாட்டிற்கான தகுதியை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேலும் இப்போ போட்டிகளில் கலப்பின மாடுகளுக்கு பங்கேற்க அனுமதியில்லை எனவும் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதியென விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் காளைகளின் உரிமையாளர்கள் நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு மாடு மற்றும் நாட்டின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் உடன் கூடிய புதிய புகைப்படமும் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு போதை வஸ்துகள் தரமாட்டேன் மற்றும் துன்புறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் கால்நடைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தரப் பரிசோதனை செய்வது அவசியம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *