மறைந்த விஜயகாந்திற்க்கு மௌன கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்
எடப்பாடி நகரம் மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய தேமுதிக சார்பில் மறைந்த விஜயகாந்திற்க்கு மௌன ஊர்வலமாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.
தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் தேமுதிக சார்பில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் எட்டிக் குட்டைமேடுல் மௌன ஊர்வலமாக வந்து விஜயகாந்தின் திருவுருவ படத்தின் முன்பு பெண்கள் ஒப்பாரி வைத்து ஆண் பெண் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்….
பின்னர் எட்டிக்குட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்