சொத்து தகராறில் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் குத்திக் கொலை

விராலிமலை அருகே சொத்து தகராறில் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் குத்திக் கொலை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே சொத்துத் தகராறில் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(80).  இவரது மகன்கள் வேலு(56) , சாமிக்கண்ணு (52). வேலு மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, சாமிக்கண்ணுவின் மகன் பேக்கரி ஊழியரான சதீஸ்குமார்(25), தாத்தா ரெங்கசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குளிப்பதற்காக வீட்டிற்குள் சென்ற பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவியான திருப்பதியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியில் உள்ள குளியலறைக்கு சென்ற திருப்பதியின் கணவர் வேலுவை பின் தொடர்ந்து சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார் 

இதை தடுக்க வந்த வேலுவின் தந்தையும் சதீஷ்குமாரின் தாத்தாவும் ஆன  ரங்கசாமியையும் கத்தியால் குத்தியுள்ளார் இச்சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து வேலு உயிரிழந்தார் ரங்கசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 

இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சதீஸ்குமாரை தேடி வருகின்றனர். இறந்த வேலுவின் மனைவி திருப்பதி (48) பாஜக மாவட்ட மகளிரணி தலைவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *