கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி விழுப்புரம் நீதிபதி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடவர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று முதல் அங்கு நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்